Tuesday, 13 September 2016

3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?





நீங்கள் எந்த நெட்வெர்க்கை பயன்படுத்துபவராக இருப்பினும் சரி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜியின் 90 நாட்களுக்கான இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்களின் முன்னோட்ட சலுகையை பற்றி அறிந்தால் நிச்சயம் உங்கள் நெட்வெர்க்கை ரிலையன்ஸ்க்கு மாற்ற விரும்புவீர்கள். அப்படியாக, உங்கள் 4ஜி போன்களில் எப்படி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம்மை பொருத்துவது என்பதை முன்பு விளக்கி இருந்தோம். இப்போது உங்கள் 3ஜி ஸ்மார்ட்போன்களில் ரிலையன்ஸ் ஜியோ சிம்மை பயன்படுத்துவைத்து எப்படி என்பதை இங்கு விளக்கியுள்ளோம்.


தந்திரம் : உங்கள் 3ஜி ஸ்மார்ட்போன்களில் சில குறிப்பிட்ட தந்திரங்களை பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம்மை பயன்படுத்திக் கொள்ள முடியும். 4ஜி, 3ஜி : அத்துடன் உங்கள் 3ஜி போனில் ஜியோ சிம் கார்ட் இணைய அணுகலை வழங்கினாலும் கூட உங்களால் 3ஜி சேவையைத்தான் பெற முடியுமே தவி, 4ஜி சேவையை பெற இயலாது என்பதும், மற்றும் பிற ஆப்ரேட்டர்களை விட கணிசமாக வேகத்தில் அணுகல் இருக்கும் குறிப்பிடத்தக்கது. தேவைகள் : உங்கள் 3ஹாய் போனில் 4ஜி பயன்படுத்த சில தேவைகள் அவசியமாகிறது முக்கியமாக ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் அல்லது மீடியாடெக் சிப்செட்.

கவனம் : உங்களின் 3ஜி போனில் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தும் போது நீங்கள் பின்பற்றும் வழிமுறைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். வழிமுறை #01 முதலில், இங்கு வழங்கப்பட்டுள்ள லின்க்கை பயன்படுத்தி எம்டிகே என்ஜினீயரிங் மோட் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும். வழிமுறை #02 அந்த ஆப் ஆனது எம்டிகே போன்களுக்கான என்ஜினீயரிங் மோட் மெனு விற்கான அட்வான்ஸ்டு செட் அப்-பை ரன் செய்யும், அதை சர்விஸ் மோட் என்றும் கூறலாம். வழிமுறை #03 நிறுவப்பட்ட ஆப்பை திறந்து அதில் என்ஜினீயரிங் மோட்'கான குறிப்பிட்ட மொபைல் குறியீட்டை பதிவு செய்யவும். வழிமுறை #04 பின்பு எம்டிகே செட்டிங்ஸ் சென்று பிரபர்டு நெட்வெர்க்கை தேர்வு செய்யவும். வழிமுறை #05 பின்னர், நீங்கள் 4ஜி, எல்டிஇ, டபுள்யூசிடிஎம்ஏ அல்லது ஜிஎஸ்எம் ஆகிய நெட்வொர்க்க்குகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் அதை சேவ் செய்து விட்டு உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்யவும். வாசகர்களின் கவனத்திற்கு: இந்த வழிமுறையானது ஒரு அதிகாரப்ப்பூர்வமான ஒன்றல்ல என்பதும், இந்த பணியின் போது ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதற்கு பொறுப்பல்ல, இதை உங்கள் சொந்த விருப்பத்தின் கீழ் செயல்படுத்தி பார்த்துக் கொள்ளவும்.



Related Posts

3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.

1 comments:

Tulis comments
avatar
3 March 2022 at 15:20

The casino review by The DOLBY GAMING INC.
Read our online 양주 출장샵 casino 포항 출장안마 review to learn about their games, promotions, payment methods 영천 출장안마 and exclusive bonuses offered. Learn more about 강릉 출장안마 their 서귀포 출장안마 games,

Reply